( கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் தேர்தலுக்கு வாக்களிக்க சகல நடவடிக்கையும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமன திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்தார்.
மாவட்ட பழைய அரசாங்க காரியாலயத்தில் 12ம் திகதிஅன்று செவ்வாய்க்கிழமை(12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 689 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் அதேவேளை தபால் மூலமாக வாக்களிக்க 17 ஆயிரத்து 03 பேர் தகமை பெற்றுள்ளதுடன் அந்த வாக்களிப்பு நடைபெற்று முடிந்துள்ளது
இந்த தேர்தல் கடமைக்கு 6 ஆயிரத்து 750 பேர் ஈடுபடவுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகள் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இடம்பெறும் இதில் தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்கள் உட்பட 46 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
அதேவேளை வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது எனவே இதுரை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அந்தந்த பிரதேசத்திலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும்
தேர்தல் வன்செயல்கள் இதுவரை பதிவாகவில்லை அதேவேளை தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவங்கள் தொடர்பாக 218 முறைப்பாடுகளில் 75 வீதமானது நோட்டீஸ் ஒட்டுவது போஸ்ரர் ஒட்டுவது வீதிகளில் பெயின்ரால் கீறுவது, கட்சி பெயர் பொறித்த ரீசேட் அணிவது போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன இந்த வீதிகளில் மற்றும் சுவர்களில் சவரொட்டிகளை ஒட்டுகின்றதனை பொலிசார் அகற்றி வரும் நிலையில் மீண்டும் அந்த சுவரெட்கெளை ஒட்டிவருகின்றனர் இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறுகின்றது
இந்த தேர்தல் சட்டவிதிகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டும் சுயேச்சைக்குழு கட்சிகளுக்கு எதிராக கொழும்பிலுள்ள தேர்த் திணைக்கத்துக்கு அறிவித்துள்ளோம் அதேவேளை பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்
இதேவேளை காலை 7.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரையும் வாக்களிக்க முடியம் எனவே மக்கள் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கவும் என அவர் தெரிவித்தார