– நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு!
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள்.
12ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது மேய்ச்சல் தரவை நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மஜகர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நானாட்டான் பகுதியிலுள்ள மேய்ச்சல் தரவை நிலத்தை நம்பி 2500 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன.
எமக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதனை கையளிப்பதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடையூறு விளைவித்து வருகின்றனர்.
மன்னாரில் உள்ள உயர் அதிகாரிகாகு மேச்சல் தரவை நிலத்தில் திருட்டுத்தனமாக காணி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதனை மக்கள் பாவனைக்கு வழங்க விடாமல் அரசியல் பின்னணியில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேச்சல் தரவை நிலத்தை தருமாறு எட்டு வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம் தருகிறோம் எனக் கூறுகிறார்கள் ஆனால் இதுவரை தரவில்லை.
இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநரிடம் எமது கோரிக்கையை கையளித்திருக்கிறோம் அவர் எதிர்வரும் 21ஆம் திகதி மன்னாருக்கு வருகை தந்து எமது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதாக தெரிவித்திருக்கிறார்.
ஆகவே எமது பிரதேச மக்கள் வாழ்வாதார தொழிலாக பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் எமக்கான மேய்ச்சல் தரவை நிலத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.