யாழ்ப்பாணத்திலிருந்து ந.லோகதயாளன்
தமிழரின் இருப்பு, தாயகம், தேசியம், சுயநிர்ணயம், என்பதெல்லாம் இன்னமும. வெற்றுக் கோசம் அல்ல என்ற மானத்தை மட்டக்களப்பு மாவட்ட மண் காத்து தமிழர்களிற்கு வழங்கியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று முடிந்த 10 வது நாடாளுமன்றத் தேர்தலில் அநுராவின் அலையில் நாடு முழுவதும் அள்ளுப்பட்டுச் சென்றிருந்தாலும் மட்டு மண் தன் இருப்பை நிலை நிறுத்தியுள்ளது. அதேநேரம் தென் இலங்கையைப் பொறுத்த மட்டில் அது கட்சி மாற்றமாகவும் தமிழர. பிரதேசங்களிலேயே இன மாற்றமாகவும் அமைந்துள்ளது.
இதேநேரம் வடக்கு கிழக்கில் இருந்த 20 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆக குறைவடைந்துள்ளது. ஒரு ஆசணம் மாவட்ட எண்ணிக்கையில் குறைவடைந்த்தோடு 4 ஆசனம் தமிழ் கட்சிகளின் சார்பில் இழக்கப்பட்டது மட்டுமன்றி தமிழ் கட்சிகளின் தேர்தல் வரலாற்றையே புரட்டிப்போட்ட சம்பவங்கள் மட்டுமன்றி பல வரலாற்றுச் சாதனைகளும் முறியணிக்கப்பட்டுள்ளது.
இதில் வடக்கு கிழக்கில் 1989 ஆம் ஆண்டு முதல் ஆயுதக் குழுக்களிற்கு அல்லது அவர்கள் கை காட்டுபவர்களிற்குத்தான் என்ற வரலாறு முழுமையாக இல்லாதாக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு 22 ஆசணங்களைக் கைப்பற்றியபோதும்கூட ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தோற்கடிக்கப்பட முடியாதவர் என்ற பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில் 10வது நாடாளுமன்றில் 20 ஆயிரம் வாக்கினைக்கூட பெற முடியாத அளவிற்கு தோல்வியுறச் செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு உடுப்பிட்டித் தொகுதியை அரச கட்சியில் போட்டியிட்டு வெற்றியடைந்த அங்கஜன் இராமநாதன் கைப்பற்றியது மட்டுமன்றி தலைவர் பிரபாகரனின் கோட்டையைக் கைப்பற்றினேன் என அறிக்கையிட்டார். அது இம்முறை தகர்கப்பட்டது மட்டுமன்றி அவரது கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப் பணத்தையும் இழந்தது.
இதேபோன்று ஆசன ஒதுக்கீடு அல்லது இடப் பங்கீடுகள் காரணமாக வெளியேறி அவசர அவசரதாக கூட்டு அமைத்த அத்தனை கட்சிகள், சுயேச்சைக் குழுக்களும் தோல்வியுற்ளனர். இதில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களும் உள் அடக்கம். இவை அனைத்திற்கும் அப்பால் ஓர் சுயேட்சைக் குழுவும் ஆசனம் எடுக்கும் என்ற நிலயும் 35 ஆண்டுகளின் பின்பு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.
இவை போன்று ரெலோவின் தலைவர் 6 ஆயிரத்திற்கும் உட்பட்ட வாக்கினைப் பெற்று வெற்றியீட்டியதனைத் தவிர எந்தவொரு ஆயுதக் குழு உறுப்பினர்களும் வெற்றிகொள்ள முடியவில்லை. இவை அனைத்தையும் கூறுவது போன்று தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் இரு ஆசணங்களைப் பெறுவது அல்பிரட் துரையப்பாவின் காலத்திற்கு பின்பு தற்போது தேசய மக்கள் சக்தி 3 ஆசணங்களைப் பெற்றுள்ளது.
அகல இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 2020ஆம் ஆண்டு மாவட்டத்தில் நேரடியாக ஒரு ஆசணத்தையும் தேசிய பட்டியலில் ஒரு ஆசனமுமாக இரு ஆசனத்தைப் பெற்றபோதும் இம்முறை கடும் முயற்சியில் ஒரு ஆசனத்தைப் பெற்று மானத்தைக் காத்துக்கொண்டது.
எல்லாக் கட்சியினையும் கூறியும் தமிழ் அரசுக் கட்சியை காணவில்லை என எண்ண வேண்டாம். தமிழ் அரசுக் கட்சியில் பலம் மற்றும் பலவீனமாக கருதப்பட்ட எம்.ஏ.சுமந்திரனே அதிக விமர்சனத்திற்கும், சர்ச்சைக்கும் அகப்பட்டதோடு பலரின் பார்வையிலும் அகப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் வகையாக மாட்டிக்கொண்டார். அதனால் 15 ஆயிரத்தை தொட்ட வாக்கை பெற்றபோதும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் சந்தர்ப்பத்தை இழந்தது மட்டுமன்றி மாவட்டத்தின் தோல்விக்கும் காரணம் என்ற அவப் பெயருக்கும் ஆளாக்கப்பட்டார். ஏனெனல் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவானது சுமந்திரனின் எண்ணத்தில் உருவானது என்ற பெரும் விமர்சணத்திற்கும் ஆளாகியிருந்தார்.
இருந்தபோதும் கிழக்கின் 3 மாவட்டத்தில் 5 ஆசணத்தைப் பெற்ற தமிழ் அரசுக் கட்சியால் வடக்கில் இரண்டு ஆசணத்தை மட்டுமே பெற்றதோடு தேசிய பட்டியலில் ஒரு ஆசணத்தையும் பெற்றுக்கொண்டது. இந்தனை நெருக்கடிகள், விமர்சனங்கள் உள்ளபோதும் ஓரு சாதனையினையும் தமிழ் அரசுக் கட்சி நாட்டியுள்ளது. அதாவது சென்றமுறை தேசிய பட்டியலுடன் 6 ஆசணங்களை மட்டுமே கொண்டிருந்த தமிழ் அரசுக் கட்சி வடக்கில் பின்னடைவை சந்தித்தபோதும் தேசிய ரீதியில் 8 ஆசணங்களைப் பெற்று நாடளாவிய ரீதியில் 3 வது பெரிய கட்சி என்ற இருப்பைத் தக்க வைத்துள்ளது.
இவை அனைத்திற்கும் மத்தியில் தமிழ் அரசுக் கட்சி அல்லாத கட்சிகள் மீது உள்ள பல குற்றச் சாட்டுக்களில் முக்கிய குற்றச் சாட்டு தமிழ் அரசுக் கட்சி அல்லது சுமந்திரன் கூடாது எனப் பிரிந்து சென்றவர்கள்கூட ஒற்றுமையாக போட்டியிட முடியாமல் நான்கு அணிகளாக பிரிந்து சென்றதும் தமிழ் அரசுக் கட்சி விட்ட தவறுதானா என்பதற்கு பதில் அளிப்பது பெரும் கடினமாகவே உள்ளது.