((கனகராசா சரவணன்)
22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின்; வெற்றியாகும் அதேநேரத்தில் மாவட்டத்தில் கடந்த காலத்தில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் இது ஆரம்பம் என மட்டு நா.உ. புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரா.சாணக்கியன் தெரிவித்தார்
நடற்து முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; போட்டியிட்ட இலங்கைக தமிழரசுகட்சி 96975 வாக்குளை பெற்று மூன்று பிரதி நிதிகளை பெற்றுக் கொண்டது இதில் இரசமாணிக்கம் சாணக்கியன் 65458, வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் 22773 வாக்குகளையும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் 21202 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த 15-11-2024 வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டார்
இவ்வாறு வாக்கெண்ணும் மத்தியஸ் தானமான மட்டு இந்து கல்லாரியில் தெரிவு செய்யப்பட் நா.உறுப்பினர்களை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவருமான திருமதி ஜஸ்டினா முரளீதரன் அறிவித்தார்
இதனை தொடர்ந்து அற்தபகுதியில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள ஒன்றுதிரண்டு வெற்றி பெற்ற நா.உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து மகிழ்சி தெரிவித்தனார்
இதனை தொடர்ந்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்
2024 நாடாளுமன்ற தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்துவமாக போட்டியிட்டு சிறந்த மூன்று வேட்பாளர்களபெற்று அமோகமான வெற்றி கிடைத்துள்ளது
மாவட்டத்தில் 2020 ம் ஆண்டு தமிழரசுகட்சி ஒரு ஆசனத்தில் இருந்து இன்று 3 ஆசனங்களை பெற்று எங்கள் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளோம் ஆதேவேளை 22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின்; வெற்றியாகத்தான் பார்கின்றேன்
அதேநேரத்தில் மாவட்டத்தில் கடந்த காலத்தில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் இது ஆரம்பம் மட்டும் தான் வடக்கு கிழக்கிலே இம்முறை இலங்கை தமிழரசு கட்சி தான் தமிழ் மக்களின் பிரதானமான கட்சியாக தெரிவாகியுள்ளது.
5 தேர்தல் மாவட்டத்தில் ஆசனம் கிடைத்த ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி அந்த வகையில் தொடர்ச்சியாக தமிழரசு கட்சி தமிழ் மக்களின் குரலாக தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இயங்கிகொள்ளும்.
தமிழரசு கட்சி மிக முக்கியயமாக முன்வைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு, மற்றும் தமிழ் மக்கள் மீது நடந்த இனழிப்பு தொடர்பாக நீதி வேண்டும் ஆதேவேளை எங்களுடைய நில அபகரிப்பு, காணி அபகிப்பு நிறுத்தப்படவேண்டும் தமிழ் மக்களுடைய பிரதேசத்தில் அபிவிருத்தி நடக்க வேண்டும் இந்த நான்னு விடையங்களுக்கும் முக்கியமாக தமிழரசு கட்சி மக்களோடு மக்களாக நின்று அடுத்து 5 வருடங்களில் உழைக்கும் என்ற செய்தியை மட்டக்களப்பில் இருந்து உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு செல்லிவைக்கின்றேன் என்றார்.