பழையவர்களும் புதியவர்களுமாக பல கட்சிகள் சார்ந்து வடக்கு கிழக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகங்கள்
இலங்கைப் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று 14ம் திகதி வியாழக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை நடத்தப்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இந்தப் பதிவு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வெளிவந்து கொண்டிருக்கினறன. ஆனால் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் எமது பத்திரிகையின் அச்சுப் பகுதி அந்த முடிவுகளுக்காக காத்திருக்க இயலாத வகையில் இந்த செய்தி எழுதப்படுகின்றது.
இந்த நேரத்தில் உ த்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் படி அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 52 ஆசனங்களும் சஜித் பிரேமதாசவின் என்ஜேபி கட்சியானது 13 ஆசனங்களையும் தமிழரக்கட்சி இரண்டு ஆசனங்களையும் பெற்றுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
இலங்கை மக்கள் மாத்திரமல்ல வெளிநாடுகளில் உள்ள மக்களும் எதிர்பார்த்திருந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை அரசொன்றை நிறுவி மக்களுக்கான சேவைகள் வழங்கும் ஆட்சியாக விளங்க தயாராகி வருவதாகவும் கொழும்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை. பல வருடங்களாக அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் காட்சியளித்தும் மக்கள் சேவைக்கு பதிலாக தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சகாக்களையும் ‘கவனித்து’ வந்த பல அரசியல்வாதிகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கடிக்கப்பட்டனர் என்பது வெளிவந்து தேர்தல் முடிவுகளின்படி அறியப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணம்.வன்னி. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிலுருந்து பழையவர்களும் புதியவர்களுமாக பல கட்சிகள் சார்ந்து வடக்கு கிழக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகங்கள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனார்கள் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
அவர்களின் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் அவர்களும் தமிழரசுக் கட்சியின் சார்பில் சிறிதரன் சிவஞானம் அவர்களும் வன்னி மாவட்டத்திலிருந்து செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து புதிய முகமாக வைத்தியக் கலாநிதி ஶ்ரீ பவானந்தராஜா என்னும் வேட்பாளர் தேசிய மக்கள் சக்தியின் சார்பாகவும் சர்ச்சைகளுக்கு உள்ளாகிய மற்றுமொரு வைத்திய கலாநிதி அர்ச்சனா இராமநாதன் அவர்களும் பாராளுமன்றம் செல்வது உறுதியாகி விட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தும் ஏனைய வடக்கு கிழக்கின் மாவட்டங்களிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்லவுள்ளார்கள் என்பதும் இங்கு உறுதி செய்யப்பெற்றுள்ளது.
2024 பொதுத் தேர்தல் உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் இலங்கை முழுவதற்குமான மாவட்டங்களில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்பெற்று அதன் கணிப்புகளும் இறுதி முடிவுகளைத் தீர்மானிக்கும் விடயத்திற்கு அவசியமானவை என்பதால் அதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
எனினும் தற்போதை சில முடிவுகளை இங்கே பதிவு செய்யலாம் என்ற எண்ணம் இந்த பதிவு இங்கு தரப்படுகின்றது.