மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்ஜியாஜி நகரின் சாங்ஜி கவுண்டியில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 7 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.