ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பாதிப்பு தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சங்கையா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது யோகி பாபு நடிப்பில் ‘கெனத்த காணோம்’ என்ற புதிய படத்தை சுரேஷ் சங்கையா இயக்கி வந்தார். இப்படம் விரைவில் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.