தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதியினரின் இளைய மகளான கீர்த்திசுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் இவரது காதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்தற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்தார். இந்தநிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமணம் சம்மந்தமாக ஒரு விஷயம் போய் கொண்டிருக்கிறது. இதுபற்றி விரைவில் அறிவிப்பேன். ஆனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானது என தெரிவித்தார். இந்தநிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் கோவாவில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் கணவர் அவரது உறவினர் எனவும் கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.