சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சித்தார்த் மருதுள் வருகிற 21 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து அந்த இடத்திற்கு டி கிருஷ்ணகுமார் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் இந்த முடிவு குறித்து இன்று அறிவித்தது.
இது குறித்து கொலிஜியம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் திரு. டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலம், “நீதிபதி திரு. டி. கிருஷ்ணகுமார் 07 ஏப்ரல் 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மே 21, 2025 அன்று முடிகிறது. அவர் தனது உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.” “உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் முன்பு, உயர் நீதிமன்றத்தில் சிவில், அரசியலமைப்பு மற்றும் சேவை விஷயங்களில் நிபுணத்துவம் மற்றும் விரிவான பயிற்சி பெற்றுள்ளார்,” என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.