சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் பெரும் வரவேற்பை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது. விரைவில் ‘கலகலப்பு 3’ உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘கலகலப்பு 3’ படத்தின் பதிவேற்றத்தை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விரைவில் ‘கலகலப்பு 3’ உருவாக இருப்பதாகவும், நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.