— முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் –
(கனகராசா சரவணன்)
புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசு விகிதாசார அடிப்படையில் 19 பெரும்பான்மையின அமைச்சர்களையும் 6 தமிழ் பேசும் அமைச்சர்களையும் தனது அமைச்சரவையில் நியமித்து செய்யப்படவேண்டும் இவ்வாறு விகிதாசார அடிப்படையில் இந்த அமைச்சுக்களை நியமிக்காவிடின் எவ்வாறு இவர்கள் நல்லாட்சியை அமுல்படுத்துவார்கள் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது எனவே சிறுபான்மையினரையும் அமைச்சுக்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈபி.ஆர்.எல்.எப் கட்சி காரியாலயத்தில் 18-11-2024 அன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
புதிய அரசு மக்களின் ஆணையை பெற்று பல சகாப்தங்களுக்கு பின்னர் கூடுதலாக ஊழலுக்கு எதிராக மாற்றத்தை விரும்பியவர்கள் வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நல்ல கொள்கைகளையுள்ள நல்லாட்சி அரசு ஆட்சிய அமைக்க போhகின்ற நிலையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படமால் இருக்க வேண்டுமாயின் விகிதாசார அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்கப்படவேண்டும் அது தவறும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு நல்லாட்சியை அமுல்படுத்துவார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு மத்தியில் தொற்றி நிற்கும் எனவே நல்ல கொள்கைகளை முன்வைக்கின்ற அடிப்படையில் இந்த புதிய அரசு 25 அமைச்சரவையில் இன விகிதாரத்தின் அடிப்படையில் 19 சிங்கள அமைச்சர்களும் 6 தமிழ் அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவேண்டும்.
நாட்டில் 9 சதவீதமாக உள்ள விசேட தேவையுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பல சதாப்தங்களுக்கு பிறகு இந்த அரசு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை கரம்கூப்பி வாழ்த்துகின்றேன் அதேவேளை நல்ல ஒரு செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த 9 வீதமான விசேட தேவையுள்ளவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவரும் 7 ஆயிரத்து 500 ரூபா அவர்களின் வாழ்வாதாரத்துக்கு போதுமானது அல்ல.
அதேவேளை வடக்கு கிழக்கில் போராட்டத்தில் சம்மந்தப்பட்டு பல போராளிகள் வலுவிழந்துள்ளதுடன் விசேட தேவையுள்ள பலர் பெரும் பொருளாதார கஸ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர் எனவே வழங்கப்பட்டுவரும் இந்த மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்பட்டுவரும் இந்த 7500ரூபா நிதியை புதிய வரவு செலவு திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்
மாகாணசபை நிதியும் மத்திய அரசாங்க நிதியுமாக வருடா வருடம் 4 ஆயிரம் கோடி ரூபா இந்த அரசாங்க நிர்வாகத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பப்படுவது வழமையானது அத்துடன் ஏனைய மாவட்ட அமைச்சுக்கள் ஊடாக மேலதிகமாக 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்படுகின்றது இவ்வாறு மாவட்டத்துக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபா நிதி ஊடாக ஒதுக்கப்படும் எனவே மாவட்டதில் நான்கு தமிழ் பிரதிநிதிகளுக்கு வாக்களித்து ஆணை வழங்கியுள்ளனர்
அது மட்டுமல்ல கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரைவிவகாரம் குசனார்மலை மற்றும் வாகரையில் கணியமண் அகழ்வு மற்றும் இயற்கை வளங்களை அழிப்பது தொடர்பான விடையங்;களை தொடர்பாக புதிய திட்டங்களையும்
குடும்பங்களை தலைமை தாங்கும் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் அதேபோன்று 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வயோதிபர்கள் உள்ளனர் இவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க வைப்பதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வரவு செலவு திட்டத்தில் கருத்துக்களை முன்வைக்கவேண்டும்
அதேவேளை 13 வது திருத்தசட்டத்தினை செயற்படுத்தப்படவேண்டும் மாகாணசபை தேர்தலை நடாத்தவேண்டும். ஒருவரை வாக்களித்து வெல்ல வைப்பதற்கும் ஒருவரை வாக்களித்து தோற்க வைப்பதற்;குமான உரிமை அந்த உரிமைகளை நாங்கள் ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்கின்றோம்.
எனவே எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் இந்த சமூகத்திற்கு முழுமையாக பல சகாப்தங்களாக செற்பட்டுவருகின்றோம் அந்த அர்ப்பணிப்பு செயற்பாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றம், உள்ளுராட்சி, மாகாணசபை தேர்தலாக இருக்கலாம் தோற்றாலும் சரி வென்றாலும் சரி நாங்கள் வென்றால் அதிகாரத்துடன் செய்வதற்கு மக்கள் ஆனையை தந்திருக்கின்றனர் ஆனால் தோற்கும் பட்சத்தில் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வோம் எனவெ யாரும் எங்களை தட்டிப்பறித்துவிட முடியாது என்றார்