பி ரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான். இவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்த்திருந்தநிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகவுள்ள ஒரு வெப்தொடரை ஆர்யன் கான் எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் தொடர், அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்த வெப் தொடரை ஷாருக்-கவுரி கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இதன் மூலம் ரெட் சில்லிஸ் – நெட்பிளிக்ஸ் உடன் 6-வது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்பாக டார்லிங்ஸ், பக்சக், கிளாஸ் ஆப் 83, பேட்டல், பார்ட் ஆப் பிளட் ஆகிய படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.