நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக பதவியேற்ற டி. பி. சரத் அவர்கள் இன்று (22) பத்தரமுல்லை செத்சிறிபாய 2ஆம் கட்டத்தில் அமைந்துள்ள பிரதியமைச்சரின் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இந்நிகழ்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அனுர கருணாதிலக, அந்த அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சமய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து மகாசங்கத்தின் ஆசீர்வாதத்தையும் பெற்று பிரதியமைச்சர் தனது முதல் கடமை கடிதத்தில் கையொப்பமிட்டார்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய பிரதியமைச்சர், நகர்ப்புற வீடுகள் மற்றும் கிராமப்புற வீடுகளின் பிரச்சினைகளுக்கு தாம் தலையிட்டு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தார்.பல்வேறு அரசாங்கங்களின் கீழ் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும், வீட்டு நிர்மாணத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருடன் இணைந்து தீர்வுகள் வழங்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.
முனீரா அபூபக்கர்