ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தற்போது ஜகபதி பாபு இணைந்துள்ளார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்றை இயக்குனர் பகிர்ந்துள்ளார். அதன்படி, ஆர்.சி 16 பட ஸ்கிரிப்டுடன் மைசூர் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலில் இருந்து ஒரு புகைப்படத்தை புச்சி பாபு வெளியிட்டுள்ளார். அதனுடன், ‘இது ஒரு பெரிய நாள்…மைசூர் சாமுண்டேஸ்வரியின் ஆசீர்வாதத்துடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தருணம் தொடங்கியது’ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்மூலம் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளதாக தெரிகிறது.