தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான டி ராஜேந்திரன் அவரின் மகனாக சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றார். தனது தந்தை இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிம்பு தற்போது சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.
காதல் அழிவதில்லை, தம், அலை, கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, பத்து தல, மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடங்கி கடைசியாக ‘தக் லைப்’ வரை நடித்துள்ளார். சிம்பு திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதை தொடர்ந்து இதனை கொண்டாடும் விதமாக வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் சிம்பு நடித்திருந்த சிலம்பாட்டம் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.