நீண்ட கால தமிழர் சமூகச் செயற்பாட்டாளர் சியான் சின்னராஜா கனடிய பொதுத் தேர்தலில் Pickering-Brooklin தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆவதற்கு விருப்பம் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்
கனடாவில் நீண்ட கால தமிழர் சமூகச் செயற்பாட்டாளர் சியான் சின்னராஜா கனடிய பொதுத் தேர்தலில் Pickering-Brooklin தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆவதற்கு விருப்பம் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.
அரசியலில் ஆர்வம் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடியப் பிரிவில் அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்று மக்கள் தொண்டாற்றினார்.
அத்துடன் நீண்ட காலமான வர்த்தகத் துறையில் ஒரு வீடு விற்பனை முகவராகப் பணியாற்றிப் பல வாடிக்கையாளர்களைக் கொண்டவராகவும் விளங்குகின்றார்.
தற்போது Pickering-Brooklin மத்திய தேர்தல் தொகுதிக்கான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்பாளராக வருவதற்கான ஆயத்தங்களையும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு தன்னைத் தயார்படுத்தி வருகின்றார்.
அன்னாரது நோக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக சில நாட்களுக்கு முன்னர் பிக்கரிங் நகரில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் நடைபெற்ற அறிமுக நிகழ்வொன்றில் தமிழ் பேசும் அன்பர்கள் பலரும் வேற்று இனங்களைச் சார்ந்த அவரது நண்பர்களும் ஆதரவாளர்களும் அங்கு சமூகமளித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்தPickering-Brooklin மத்திய தேர்தல் தொகுதியானது தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவதற்குரிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அந்த வகையில் அடுத்து வரும் கனடாவின் பொதுத் தேர்தலில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதால் அங்கு மக்கள் ஆதரவு கொண்ட வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால் அந்த வாய்ப்பு தமிழர் ஒருவருக்கு கிட்டும் என்றும் மேற்படி அறிமுக நிகழ்வில் பல தமிழ் அன்பர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அந்த வகையில் நண்பர் சியான் சின்னராஜா இந்த வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மேற்படிPickering-Brooklin தொகுதியில் வாழும் அனைத்து தமிழ் பேசும் அன்பர்களும் ஒன்றாக இணைந்து அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
Arjune- Local Journalism Initiative Reporter