ப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு ஆப்கானிஸ்தான் படாகூஷான் அருகே இந்திய நேரப்படி காலை 9.58 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இது அட்சரேகை 36.51 வடக்கு மற்றும் தீர்க்கரேகை 70.59 தெற்கு. வடக்கு ஆப்கானிஸ்தான் இயற்கை பேரழிவுகளுக்கு வாய்ப்புள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். படாகூஷானில் இருந்து 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு, உயிரிழப்பு ஏற்பட்டதாக விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த வார தொடக்கத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.4 மற்றும் 3.9 என பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டன. கடந்த மாதத்தில் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.