நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை ஜெயபால்.ஜே இயக்கியுள்ளார். படத்தின் இசையை மரியா ஜெரால்ட் மேற்கொண்டுள்ளார். தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் லோவர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் நிதர்சத்தையும், எதார்த்தத்தியும் பதிவு செய்துள்ள திரைப்படமாகும். மதுரை மாநகராட்சியில் உள்ள ஒரு குடும்பம் தீபாவளி போனஸை மையமாக வைத்து எடுத்துள்ள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
