காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோண மலையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென் கிழக்கே 750 கி.மீ. தொலை விலும், சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைந்தது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசையில் தமிழகம் -இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபெங்கல் புயல் என பெயரிடப்படும். இதனிடையே, சென்னையில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 28-ந்தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.