நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவம்பர் 28ம் திகதி அன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.