கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையிலும் ராம் – ஜானு இந்த இரண்டு பெயர்களும் ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது. இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய மெய்யழகன் படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, பிரேம் குமார் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குனர் பிரேம்குமார் பேட்டி ஒன்றில் 96 பாகம் 2 படத்தின் கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதன்படி தற்போது அந்த கதை பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி – திரிஷாவை வைத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம் குமார் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
