காலை தொடக்கம் இரவு வரை அணியணியாக வருகை தந்து இதய தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்க் கனடியர்கள்
கடந்த 27ம் திகதி புதன்கிழமையன்று கனடா ரொறன்ரோ நகரில் பிரமாண்டமான மண்டபமான TORONTO INTERNATIONAL CENTRE என்னும் அழகிய மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு காலை தொடக்கம் இரவு வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
இந்த உணர்வுபூர்வமான நிகழ்விற்கு தொடர்ச்சியாகவும் அணியணியாகவும் வருகை தந்து இதய தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்க் கனடியர்கள் மண்டபத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து அங்கு இடம்பெற்ற மனதை உருக்கும் நடனங்கள்- விடுதலைப் பாடல் மாவீரர்களுக்கான பாடல்கள் மற்றும் உரைகள் என அனைத்து மேடை நிகழ்வுகளை அமைதியாக இருந்து பல உணர்வுகளை அனுபவித்துச் செய்தனர்.
இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்த மாவீரர் நினைவெழுச்சி குழுவினரை அனைத்து மக்களும் பாராட்டிச் சென்றனர்.