சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது என பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!
தமிழ் மக்கள் அடக்குமுறைக்குள்ளே வாழ்கின்றனர் : சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது – பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தொடர்ந்தும் எமது உரிமைகளை காகப் போராடிவரும் இனமாகவே தமிழினம் காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சோம பாலன் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் செய்த சீன தூதவர் தமிழ் மக்கள் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து மாற்றத்துக்காக பயணிப்பதாகவும் இனப் பிரச்சனை தொடர்பில் ஒன்று இணைந்து பயணிப்பார்கள் எனத் தெரிவித்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் எந்த ஒரு நாட்டினையும் நட்பு நாடாகவோ அல்லது எதிரி நாடாகவோ பார்ப்பது கிடையாது. இவ்வாறான நிலையில் அண்மையில் யாழ்ப்பாண விஜயம் செய்த சீன தூதுவர் தெரிவித்த கருத்து தொடர்பில் சில விளக்கத்தை தெரிவிக்கலாம் என நினைக்கிறேன்.
தமிழ் மக்கள் வாழ்வியல் நீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்கள் விவகாரம், சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
தமிழ் மக்கள் தமக்கு விளைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி பயணித்தவர் நிலையில் அதற்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
அண்மையில இடம் பெற்ற பாராளுமன்றத் முடிவுகளை வைத்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது ஏனெனில் அதையும் தாண்டி பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் உடைய அமைச்சர் ஒருவர் காணாமல் போனவர்களை 15 வருடங்களாக காணவில்லை என்றால் காணவில்லை தான் என்ற கருத்துப்பட கருத்து தெரிவித்திருந்தார்.
அவருடைய கருத்தை பார்த்தால் 2009க்கு முன்னர் அவர்களுடைய கட்சி பலரை காணாமல் ஆக்கியது அது தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இதை அவர் அவ்வாறு காணாமல் போனது காணாமல் போனது தான் என்ற கருத்து படத் தெரிவித்திருக்கிறார்
ஆகவே தமிழ் மக்கள் தமது தேசிய விடுதலைக்காக போராடிவரும் ஒரு இனமாக காணப்படுகின்ற நிலையில் அதனை வென்றெடுப்பதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மன்ற வகையில் எங்களால் முடிந்தவரை தொடர்ந்தும் பயணிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.