ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களும் அவரது சக பாராளுமன்ற அங்கத்தவர்களும் அமைச்சர்களும் இணைந்து நடத்திய பல்லின பத்திரிகையாளர்களுக்கான வரவேற்புபசாரம்
“கனடா ஒரு பல்லின கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் நாடாகவும் பல்லின மக்களை உலகெங்கிலுமிருந்து வரவேற்கும் நாடாகவும் விளங்குவதால். இந்த தேசத்தின் மிகப்பெரிய மாகாணமாக விளங்கும் எமது ஒன்றாரியோ மாகாண அரசாங்கமும் பல்லின கலாச்சாரத்தையும் அதன் பெருமையையும் நன்கு உணரக் கூடியவர்களாக நாம் இன்று பத்திரிகையாளர்களாகிய உங்கள் முன்பாக மகிழ்ச்சியுடன் நின்று உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.
பல்லின மக்களையும் அவர்களின் மொழி மற்றும் பண்பாடு போன்றை எம்மைப் போன்றவர்கள் அறிந்த கொள்ளும் வகையில் பத்திரிகையாளர்களாகிய உங்கள் அனைவரதும் சேவை முக்கியமாகதாக விளங்குகின்றது. எனவே உங்கள் அனைவரையும் இன்றைய நாளில் எமது அரசாங்கத்தின் சார்பாகவும் மற்றும் எமது அமைச்சர்கள் அங்கத்தவர்கள் அனைவரதும் சார்பாகவும் வரவேற்கின்றோம்”.
இவ்வாறு 28ம் திகதி வியாழக்கிழமையன்று மாலை ஒன்றாரியோ பாராளுமன்ற வளாகமான ‘குயின்ஸ்பார்க்’ மண்டபத்தில் டிநடைபெற்ற முதல்வர் டக் போர்ட் அவர்களும் அவரது சக பாராளுமன்ற அங்கத்தவர்களும் அமைச்சர்களும் இணைந்து நடத்திய பல்லின பத்திரிகையாளர்களுக்கான வரவேற்புபசாரம் பல்லின பத்திரிகையாளர்களுக்கான வரவேற்புபசார நிகழ்வில் பிரதான உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண முதல்வர் கௌரவ ட்க் போர்ட் அவர்கள் தெரிவித்தார்.
ஸ்காபுறோ-அஜின்கோர்ட் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் அவர்கள் ஆரம்ப உரையாற்றினார்.
மேலும் அமைச்சர் றேமண்ட் சோ போன்றவர்களும் உரையாற்றினர். எமது தமிழ் பேசும் மாகாண் பாராளுமன்ற உறுப்பினர்களாக லோகன் கணபதி மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகியோரும் அங்கு சமூகளித்து அனைத்த பத்திரிகையாளர்களோடு உரையாடி மகிழ்ந்து அவர்களின் சேவைகளுக்காக அனைவரையும் பாராட்டினர்.