(கனகராசா சரவணன்;)
பிரித்தானிய நாட்டில் தீவிரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரை இலங்கை கட்டுநாயக்கா விமான நியைத்தில் நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை (30) கைது செய்துள்ளாக விமான நிலை பொலிசார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவா 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்று பிரித்தானியவில் தஞ்சமடைந்து அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர் அங்கு தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு பணம்சேகரித்து அந்த பணத்தை கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகித்தள்ளார்.
இவருக்கு எதிராக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவை பெற்றிருந்தனர். இந்த நிலையில் குறித்த நபர் பிரித்தானியாவில் இருந்து இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தை சம்பவதினமான 30ம் திகதி வந்தடைந்தபோது இவரை குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கட்டுநாயக்கா விமான நிலைய பொலிசார் குறித்த நபரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.