((கனகராசா சரவணன்) )
மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறு 10 இலட்ச்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடுவழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுணதீவு பிரதேச செயலக்பிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் கடந்த 26ம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இறால் பிடிக்கும் தறுவாயில் இருந்த இறால்கள் அடித்து செல்லப்பட்டு அருகிலுள்ள ஆறுகளுக்குள் அடித்துச்; சென்றுள்ளதுஇ
குறித்த பிரதேசத்தில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் சுமார் அமைக்கப்பட்டு 20 வருடத்துக்கு மேலாக இறால் வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர்கள் இந்த நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு பின்னர் வளர்ப்பு இறாலை பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த நிiலையில் திடிரேன ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தினையடுத்து இந்த வளர்ப்பு இறால்களை வளர்த்துவரும் குளங்களிக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததையடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த அணைக்கட்டுகள் உடைபெடுத்ததையடுத்து குளத்திலுள்ள இறால்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு வாவிக்குள் போயுள்ளது.
இதனால் இறால்வளர்ப்பு குளத்தில் இருந்த இறால்கள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு பண்ணையாளரும் சுமார் ஒன்றரை கோடி ரூபா வீதம் 30 கோடி ரூபாவை இழந்துள்ளதுடன் இந்த திட்டத்துக்காக இறால்குஞ்சுகள் மற்றும் அதற்கான தீன்கள் 75 இலச்சம் ரூபாபாவிற்கு கடனாக கொள்வனவு செய்தோம் இவ்வாறு ஒவ்வொரு பண்ணையாளரும் இந்த அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ளோம்
அதேவேளை இந்த இறால்களள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அந்நிய செலாவனியை கொண்டுவந்தோம் இருந்த போதும் இந்த பாதிப்பால் மகவும் பாதிபடைந்துள்ளோம் எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு நஷ்டஈடுவங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.