யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. இவர் கடைசியாக இசையமைத்த கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. இவர் இசையமைப்பது மட்டும் மின்றி அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தை தயாரித்தார். தற்பொழுது யுவனின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட் ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இந்நிலையில் படத்தின் புதிய பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. இப் பதாகையில் ரியோ ராஜ் மற்றும் கதாநாயகி கோபிகா ரமேஷ் கடற்கரையில் அமர்ந்து இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது, ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
