((கனகராசா சரவணன்) )
ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்ச்சம் ரூபாவில் நிதியுதவியுடன் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டு கழகம் 100 பெதிகளை வழங்கிவைத்தது.
ஏறாவூரில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைப்பாட்டினை அறிந்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவிடம் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் இலங்கை பொலிஸ் அணி மற்றும் பேஷ்போல் விளையாட்டு வீரருமான யு.நஜிவுல்லாஹ் சமூக வலைத்தளத்தின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்சம் நிதி உதவியை வழங்கினார்.
இதற்கமைய யங் ஹீரோ விளையாட்டுக் கழகம் வெள்ளத்தல் பாதிக்கப்பட்ட குடும்பகளிலுள்ள 100 குழந்தைகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான பால்மா மற்றும் இதர பொருட்கள் பொதிகனை வழங்கிவைத்தனர்.
இதேவேளை இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேஷ் திக்சனா வழங்கிய உயரிய மனிதநேய பணிக்கு விளையாட்டு கழகம் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது