கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு இப்படம் மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து ‘மிஸ் யூ’ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாக ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைத்தது. தற்பொது ‘மிஸ் யூ’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
