திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த மாதம் 14-ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான படம் கங்குவா. இப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால், இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, படம் வெளியாகி 3 நாட்களுக்கு ரசிகர்களின் கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், விமர்சனங்களால் திரைப்படங்கள் தோல்வியடைவதாக கூறி திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது. விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அவதூறு பரப்பினால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று கூறி தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.