நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. இப்படத்தில் பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் என்று தலைப்பிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தில் நடிகர் மிர்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் அர்ஜூன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜாலியான கேங்க்ஸ்டர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் டிசம்பர் 13-ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னோட்டம் வெளியான 3 மணி நேரத்தில் 1,50,000 பார்வைகளை கடந்து வலையொளியில் வெளியாகி உள்ளது. மேலும் இணையத்தில் இந்த முன்னோட்ட காட்சி வைரலாகி வருகிறது.
