விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படம் ’12வது ஃபெயில்.இப்படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி-க்கு இந்த படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பல தடைகளை கடந்து தனது திறமையின் மூலம் பலரது மனதில் இடம் பிடித்துள்ள விக்ராந்த், சினிமாவை விட்டு விலகுவது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவர் 2025 ஆம் ஆண்டு அவரது கடைசி படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவருடைட மொத்த சொத்து மதிப்பு 20- 25 கோடி ரூபா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக 1 முதல் 2 கோடி ரூபாய் வாங்குகிறார். இவர் சொகுசு காரான வோல்வோ எஸ்90 மதிப்பு 60.4 லட்சமாகும். 12 லட்ச மதிப்புள்ள டுகாட்டி மான்ஸ்டர் பைக் ஒன்றை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
