அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் கேப் மென்டோசினோ பகுதியில் அதிகாலை 12.14 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
