தென் ஆப்பிரிக்காவின் ஸ்டில்போன்டைன் என்ற இடத்தில் மூடப்பட்ட சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சட்டவிரோத தங்க சுரங்கத்திற்குள் தங்கம் எடுப்பதற்காக ஏராளமான சுரங்க தொழிலாளர்கள் அங்கு சென்றுள்ளனர். சுரங்கத்திற்குள் சென்ற அவர்கள் எதிர்பாராத விதமாக உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாக தென் ஆப்பிரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்டுள்ள போலீசார், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கானதாக இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.