டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளிவந்துள்ளார். பல நிபந்தனைகளால் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அதிஷி டில்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே வரும் பிப்ரவரியில் டில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி. மேலும் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது எனவும், தனித்துப் போட்டி எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி, அதனைத்தொடர்ந்து சமீபத்தில் 20 பேர் கொண்ட 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் இன்று 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி தொகுதியிலும், தற்போதைய முதலமைச்சர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.