ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. ஏனென்றால், அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால், இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது. இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த வாழ்நாள் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அஜித் சார், கனவு முழுமையடைந்தது. இன்று அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு என தெரிவித்துள்ளார் .