இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் பல கமர்சியல் வெற்றி படங்களை இயக்கி கமர்சியல் ஜாம்பவானாக வலம் வருகிறார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமுள்ள இவர் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருவது மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் ‘ஹிட் லிஸ்ட்’. இந்த படத்தில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து கவுதம் வாசுதேவ் மேனன், சரத்குமார், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், இப்படம் டெண்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.