பாகிஸ்தானில் காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.55 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 32.20 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.72 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 11ம்தேதி பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.