சீனாவின் உள்துறை விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதையும், சட்டவிரோதமாக அடக்குமுறையை கையாள்வதையும் சீன அரசு ஏற்றுக்கொள்ளாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த நலன்களை உறுதியுடன் பாதுகாக்கிறது. மேலும் சீனா மீது சட்டவிரோதமான முறையில் அமெரிக்கா அடக்குமுறையை கையாள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தைவான் உள்ளிட்ட சீனாவின் உள்துறை சார்ந்த பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடுவதை சீனா எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
