அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலவி பயின்று வருகின்றன, இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். அதேவேளை, துப்பாக்கி சூடு நடத்தியது சிறுவன் என்பதும் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுவனும் உயிரிழந்துவிட்டான் என தகவல் வெளியாகியுள்ளது.
