துருக்கி நாட்டில் கடந்த மாதம் முதல் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. அதன்படி, கடந்த 10 நாட்களில் கள்ளச்சாராயம் விற்றதாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
