கனடாவின் ஸ்காபுறோ நகரிலிருந்து தொடர்ச்சியாக கடந்த 28 வருடங்களாக வெளிவரும் ‘மக்கள் பத்திரிகை’யான கனடா உதயன் தனது 28வது ஆண்டு விழாவை பல்சுவைக் கலை நிகழ்ச்சிகளோடு கடந்த சனிக்கிழமையன்று 14ம்திகதி ( 14-12-2024)’கென்னடி கொன்வென்சன் சென்றர்’ மண்டபத்தில் நடத்தியது.
உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் தலைமையில் இயங்கிய விழாக்குழுவில் தேசம் மாத இதழின் வெளியீட்டாளர் சங்கர் சிவநாதன் மற்றும் மரியாம்பிள்ளை மரியராஜா அத்துடன் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை ஆகியோர் செயற்பட்டனர். கனடாவில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நண்பர்கள் பலரது ஆதரவும் சில கலை சார்ந்த அமைப்புக்களும் உதயன் பத்திரிகையோடு தோளோடு தோள்நின்று இந்த விழாவை அழகிய முறையில் நடத்த உதவினர். கனடாவில் உள்ள பல ஊடக நண்பர்கள் உதயன் பல்சுவைக் கலைவிழா பற்றிய செய்திகளையும் அறிவுப்புக்களையும் சிறப்பாகச் செய்திருந்தனர் என்றால் அது மிகையாகாது.
உதயன் பல்சுவைக் கலை விழாவிற்கு சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து ‘தமிழா! தமிழா! தொலைக்காட்சி புகழ் கரு பழனியப்பன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் அழைக்கப்பெற்ற அரசியல் பிரமுகர்களான தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி , மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் மற்றும் மாகாண அரசின் உறுப்பினரும் ஒன்றாரியொ அமைச்சு ஒன்றின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி மற்றும் எம். பி சல்மா சாகிட், மாகாண அரசின் அமைச்சர் கௌரவ றேமண்ட் சோ. மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர் சுவான் சென் மற்றும் எம்பி சல்மா சாகிட் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கனடா உதயன் பத்திரிகையின் சேவையினையும் அதன் பிரதம ஆசிரியரின் மகத்தான ஊடகப் பணியையும் பாராட்டி உரையாற்றினார்கள்.
இவ்வருட விழாவில் கனடாவில் புகழ்பெற்ற மெல்லிசைக்குழுவான ‘ஆரோசை’ இசைக்குழுவின் இனிய மெல்லிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பார்வையாளர் இறுதிவரை இருந்து உணவருந்திய வண்ணம். இசை மற்றும் நடனங்களை ரிசித்து மகிழ்ந்தனர்.
நடன ஆசிரியை அற்புதராணி கிருபைராஜ் அவர்களின் மாணவிகள் வழங்கிய அழகிய நடனம் சபையோரைக் கவர்ந்தது. அதே போன்று ஏனைய கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்தன.
விழா நிகழ்ச்சிகளை தமிழில் ஜஸ்ரின் போல் அவர்களும் தமிழில் செல்வி ஹம்சா சாந்தகுமார் அவர்களும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள்.
அன்றைய விழாவிற்கு அனுசரணை வழங்கிய கேரி குரூப் -வைபவரன் ஹொஸ்பிட்டாலிற்றி குரூப் மற்றும் லத்திகா நகை மாளிககு கொம்பியுடெக் கல்வி நிறுவனம் உட்பட பல வர்த்தக நிறுவனங்களுக்கு உதயன் நிறுவனம் நன்றி தெரிவித்து கேடயங்களை மேடையில் வழங்கியது. அவற்றை திரு கரு பழனியப்பன் அனைவருக்கும் வழங்கினார்.
அன்றைய விழா மேடையில் கனடா ‘உதயன்’ பத்திரிகையின் 28 வருட கால தொடர்ச்சியான ஊடகப் பணிகளுக்கு பல துறைகளைச் சார்ந்தவர்கள் புகழாரம் சூட்டினார்கள். அரசியல்டி தலைவர்கள் மற்றும் திரு கரு பழனியப்பன் உட்பட சிறப்புரைகளை ஆற்றிய நிமால் விநாயகமூர்த்தி மற்றும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு அரி அரிகரன் ஆகியோரும் பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
வீடியோ நேரலை ; படங்கள்”ஜிரிஏ மீடியா குரூப் கெங்கா- தமிழாரம் மீடியா குருப் கேதீஸ் மற்றும் நண்பர் ரகுமாறன் கிருஸ்ணா ரெலிகாஸ்ட் கிருஸ்ணலிங்கம்- யுகம் வானொலி கணபதி ரவீந்திரன்- தமிழ் வண் தொலைகாட்சி மற்றும் ஊடகச் சேவை ஆகியோருக்கும் நன்றி.