முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப்படகொன்று கரையொதுங்கியுள்ளது. அப்படகில் 102மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும், இதில் 35பேரளவில் சிறுவர்களெனவும், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் முதியவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் சொல்லப்படுகின்றது.
இந் நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த கப்பலில் இருக்கும் அகதிகளுக்கு அப்பகுதி மீனவசங்கத்தினருடன் இணைந்து படகில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பெற்றன.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோரும் கரையொதுங்கிய அகதிகளின் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.
இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.