Royal Lepage Ignite Realty Inc’ வீடு விற்பனை நிறுவனத்தின் அதிபர் சுகன் சிவராஜா அவர்கள் நடத்திய விற்பனைச் சாதனையாளர் விருது வழங்கும் விழா
கனடாவில் தமிழர் நிர்வாகத்தில் இயங்கிவரும் வீடு விற்பனை முகவர் நிறுவனங்களில் அதிகம் பேசப்படும் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் RoyalLepage Ignite Realty Inc வீடு விற்பனை முகவர் நிறுவனத்தின் அதிபர் சுகன் சிவராஜா அவர்கள் நடத்திய விற்பனைச் சாதனையாளர் விருது வழங்கும் விழா கடந்த 14-12-2024 சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ பிரைடரன் கொன்வென்சன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள் கலந்து கொண்டார்கள்
பல வீடு விற்பனை முகவர்களும் ஏனைய துறைசார்ந்தவர்களும் அங்கு கலந்து கொண்டு விழாவிற்கு மெருகூட்டினார்கள்.
விற்பனை விருதுகள் வழங்கும் விழாவில் அதி உயர் விற்பனை விருதினைப் பெற்றவரும் ஏனைய உயர் விருதுகளைப் பெற்றவர்கள் சிறப்பு கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றனர். சிறந்த .Listing Award
விருதினை சிவராஜா சகோதரர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
இதைப் போன்று அடுத்த தரத்திற்கு ஏற்ப வி ற்பனை விருதுகள் பலருக்கு வழங்கப்பெற்றன.
அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரை சுகன் சிவராஜா மற்றும் அவரது சகோதரர்கள் ஆகியோர் தமது குடும்பத்தினருடன் இணைந்து வரவேற்று உபசரித்தார்கள்.
அழகிய முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழாவை சிறப்பானதாக்க பலரும் உழைத்த அதேவேளை அனைத்து வீடு விற்பனை முகவர்களும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்கள்.
PHOTO CREDIT TO MR. RAVI ATCHUTHAN..
Ganeshannthan – Local Journalism Initiative Reporter