தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதில், எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு…. என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பதிவேற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரம்யா இணைந்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு அறிவித்திருக்கிறது.
