இந்திய அரசியலமைப்பு, அம்பேத்கர், மகாத்மா காந்தி, சு வெங்கடேசன்மக்களவை செயலகம் வெளியிட்ட சிறப்பு காலண்டரில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படங்கள் இடம்பெறாததால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எம். மக்களவை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் “இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ இடம்பெறவில்லை. இது வரலாற்றைத் திரிக்கும் நோக்கில் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாகும். இந்த காலண்டரை திரும்பப் பெற்று மக்களவை செயலகம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
