சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 123 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்ததையடுத்து, விமானம் பாதுகாப்பாக ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தின் பழுது சரிபார்க்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
