இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இளையராஜாவை சந்தித்து விடுதலை 2 படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.
