தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹபீபி’. அரபுச் வார்த்தையான ஹபீபிக்கு தமிழில் ‘என்அன்பே’ என்று பொருளாகும். இப்படத்தை அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இயக்குநர் கஸ்தூரிராஜா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஈஷா என்பவர் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக ‘ஜோ’ படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘ஹபீபி’ திரைப்படத்தில், ஏஐ தொழில்நுட்பத்தில் நாகூர் ஹனிபா குரலில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
