கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் திரு.சந்தீப் சௌத்ரிக்கும் இடையிலான கலந்துரையாடல் 26-12-2024 அன்று (26) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட 2371 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர் கலந்துரையாடியதுடன், அதற்கு உரிய உதவியையும் வழங்குவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே வழங்கி வரும் உயர்கல்வி புலமைப்பரிசில்கள் குறித்து இங்கு தெரிவித்த இந்திய செயலாளர், எதிர்காலத்தில் இலங்கையின் மற்றும் கிழக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளின் மேம்பாட்டிற்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.